உக்கடம் ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நேற்று நடைபெற்றது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை லட்சுமி நரசிம்மர் திருகோவிலில் குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் இரவு முதல் யாக வழிபாடுகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பொதுமக்கள் முன்னிலையில் திருக்கோவில் கலசத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவைத் தொடங்கி வைத்து வழிபாடு செய்தார். இந்த குடமுழுக்கு விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் பல மக்கள் கலந்துகொண்டதால் காவல்துறையினரின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் வாகனங்கள் அனைத்தும் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன. இன்று முதல் இந்த கோவிலில் மண்டல வழிபாடுகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.