Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்….. ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை….!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் மதியம் 2:30 மணி அளவில் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் 3 ரயில்கள் தற்போது நின்று செல்கிறது. இந்த ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் 3 ரயில்கள் தவிர மற்ற நேரம் ரயில் சேவை இல்லாததால் ரயில்வே நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு கடந்த 5 வருடங்களாக ரயில்வே நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் 3 ரயில்கள் மட்டுமே செயல்படுவதால் பல கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட உள் கட்டமைப்பு வசதிகள் பயன்பாடு இன்றி இருக்கிறது. இதன் காரணமாக  கிணத்துக்கடவு பகுதியில் கூடுதலாக ரயில்கள் நின்று செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை கிணத்துக்கடவு பகுதியில் நின்று செல்ல வேண்டும்.

இதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கிணத்துக்கடவு பகுதிக்கு வருவதற்கு ரூபாய் 30 கட்டணம் வசூலிக்கப்படுவதால் பேருந்து கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் இருப்பதாக கூறி கட்டணத்தை மறுபரிசீலனை செய்து குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிணத்துக்கடவு ரயில் நிலையத்திலிருந்து பேருந்து வசதி இல்லாததால் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு பேருந்து வசதி ரயில் வரும் நேரத்தில் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |