Categories
மாநில செய்திகள்

யூனிபார்ம் அணிந்த மாணவர்களுக்கு இலவச பயணம்….. அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

சீருடை அணிந்த அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டால், நடத்துனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. எனினும் அவர்களை ஏற்றமறுப்பது, உரிய நிறுத்தத்தில் இறக்காமல் செல்வது, பாதி வழியில் இறக்குவது ஆகிய செயல்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் இடையே தகராறுகள் நடக்கிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க, கல்வி நிறுவனங்களிடம் தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

இலவச பஸ்பாஸ் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பாஸ் இல்லாத மாணவர்களிடம் டிக்கெட் எடுக்கும்படியும், இல்லையெனில் பேருந்தை விட்டு இறங்கும்படியும் நடத்துனர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இந்நிலையில் சீருடை அணிந்த அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்க கூடாது. அவர்களின் பழைய பஸ்பாஸ், கல்வி நிறுவன அடையாள அட்டை இருந்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனை மீறினால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |