ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் போகும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று அந்த சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்துநின்றது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிவந்த கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது. இதையடுத்து கரும்புகளை தன் குட்டிக்கு துதிக்கையால் எடுத்துபோட்டு தானும் தின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் குட்டி யானை திடீரென்று அந்த ரோட்டில் நின்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடியது. இதனால் மோட்டார்சைக்கிளில் வந்தவர் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உடனே அவர் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய மோட்டார்சைக்கிளை திருப்பி வேகமாக சென்று உயிர்தப்பினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.