Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பின”…. உபரி நீர் வெளியேற்றம்…. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, குந்தா மின் வட்டம் உள்ளிட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. மேலும் தினமும் 50 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து இருக்கின்றது.

இதனால் அப்பர் பவானி அணை 210 அடி உயரம் கொண்ட நிலையில் தற்போது 180 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. தற்பொழுது குந்தா அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு ஹெத்தை அணைக்கு செல்கின்றது. இந்த அணையிலும் ஒரு சில நாட்களில் தண்ணீர் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால் கரையோரம் வாழும் மக்கள் கவனமாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

Categories

Tech |