Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பற்றி கூறிய எஸ்ஏசி…. “இதை சத்தியமா இது பார்க்கவில்லை”…. நெட்டிசன்ஸ் கருத்து….!!!!!

விஜய் பற்றி எஸ்ஏசி கூறியதை கேட்டவர்கள் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இதையடுத்து இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் நேரில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வர முடியவில்லை.

என்னுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நான் போனதுக்கே திருக்கடையூரில் நல்ல கூட்டம் விஜய் வந்திருந்தா என்னவாகி இருக்கும். அவர் மட்டும் கோவிலுக்கு சென்றிருந்தால் கூட்டம் கூடியிருக்கும். சதாபிஷேகத்தை நிம்மதியாக நடத்தியிருக்க முடியாது. நாங்கள் சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடினோம். காதலித்து கரம்பிடித்த மனைவி ஷோபாவுடன் மனநிறைவாக பிறந்தநாளை கொண்டாடினேன் என கூறியுள்ளார்.

 

Categories

Tech |