இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் வெளியாகயுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தை சமாளித்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக முப்படை தலைமை தளபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை ரணில் விக்ரமசிங்கே நியமித்துள்ளார். மேலும் உயர்நிலைக் குழுவில் கடற்படை, விமானப்படை, தரைப்படை தலைமை தளபதிகள் மற்றும் போலீஸ் ஐஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.