Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் சர்ச் தெருவில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒதயத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு சாம் ஜோசப்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவத்துறையில் டிப்ளமோ படித்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாம் ஜோசப் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் இறைவன் காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சாம் ஜோசப்பின் மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சாம் ஜோசப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாம் ஜோசப்பின் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |