விபத்தில் இறந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் கிராமத்தில் சரவணன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பரான சிபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் விளங்கம்பாடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சிபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் சரவணன் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த உடல் உறுப்புகள் சென்னை மற்றும் கேரளாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவரான சரவணனின் உடல் உறுப்புகளால் தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.