பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஸ்ரீநிதி. அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீநிதி கலந்து கொண்டார். இந்த நிலையில் கோப்ரா படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு வாங்கியதை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளாராம் ஸ்ரீநிதி.
அதாவது கேஜிஎப் படத்தில் நடிப்பதற்கு ஸ்ரீநிதிக்கு மூன்று கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து கோப்ரா படத்திற்காக ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் ஸ்ரீநிதி. கோப்ரா படத்தை லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்து உள்ளார். மேலும் முதல் தமிழ் படத்திற்கே ஸ்ரீநிதிக்கு ரூபாய் 6000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது கோலிவுட் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவின் சம்பளத்தை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.