சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய 2 திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல்செய்து சாதனை படைத்தது. இந்த 2 திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிவரும் “பிரின்ஸ்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ரியாபோஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்த படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட் இன்று காலை 10:10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அறிவித்தபடி இப்படத்தின் அறிவிப்பு வீடியோவானது பதிவின் வாயிலாக வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ரஜினி நடிப்பில் 1986 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியாகிய மாவீரன் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் ரஜினி போன்ற பாவனைகளுடன் சிவகார்த்திகேயன் சண்டை போடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.