Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. பின் நடந்த சம்பவம்….!!!!

வேலூர் பில்டர் பெட் சாலையிலுள்ள வீட்டில் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்து இருப்பதாக குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வேலூர் குடிமைப் பொருள் தனி தாசில்தார் சத்தியமூர்த்தி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு சென்று வீடு, வீடாக சோதனை செய்தனர். அப்போது கலாஸ் நிமந்தக்கார தெருவிலுள்ள பாழடைந்த வீட்டினுள் பெரும்பாலான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடிமைப்பொருள் குழுவினர் வீட்டிற்குள் சென்று மூட்டைகளை திறந்துபார்த்தனர்.

அவற்றில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதன்பின் அக்கம் பக்கத்தினரிடம் அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கிவைத்த நபர்கள் தொடர்பாக குடிமைப்பொருள் குழுவினர் விசாரித்தனர். எனினும் அதுபற்றி எதுவும் தெரியாது என பொதுமக்கள் தெரிவித்துவிட்டனர். அதனை தொடர்ந்து குடிமைபொருள் குழுவினர் அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59 மூட்டைகளில் இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் தொரப்பாடியிலுள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். அத்துடன் ரேஷன் அரிசியை பதுக்கிவைத்த நபர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |