பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் என்ற பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் டெல்லியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு நிறுவனத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒன்றாக லிவ்-இன்-ல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்தப் பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்தப் பெண் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அந்த கடிதத்தில், தனது காதலன் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து தன்னுடன் உறவு கொண்டதாகவும் தன்னை கட்டாயப்படுத்தி 14 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனை நம்பி 14 முறை கருக்கலைப்பு செய்து இறுதியில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.