Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…. மகிழ்ச்சியில் பக்தர்கள் ….!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாளம் மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணி முதல் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது என்பதால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மறுநாள் முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகள், வழிபாட்டுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மேலும் 5 நாட்கள் தொடர்ந்து ஆடி மாத சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசனம் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் ஐயப்பன் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |