Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த வாலிபருக்கு…. சரியான பாடம் புகட்டிய கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக ஆபாச படங்களை அடிக்கடி அனுப்பி வந்தார். அத்துடன் ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் சந்திக்க அழைப்பு விடுத்து, உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார். அதன்பின் குறிப்பிட்ட வாலிபரின் இன்பசேட்டைகளை அந்த இளம்பெண் தன் கணவரிடம் தெரிவித்தார். இதற்கிடையில் கணவர் கூறியதற்கிணங்க குறிப்பிட்ட வாலிபரை நேரில் சந்திக்க வருமாறு அந்த இளம்பெண் அழைப்பு விடுத்தார். அதனை உண்மை என நம்பிய வாலிபர் ஆசையுடன் இளம்பெண்ணை நேரில் வந்து சந்தித்தார்.

அப்போது அந்த வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த வாலிபர் மிகவும் தாக்கப்பட்டு அவரது மண்டை உடைக்கப்பட்டது. அதாவது அந்த இளம்பெண்ணின் கணவரும், அவரது உறவினர்களும் அடித்து உதைத்து வாலிபருக்கு பாடம் புகட்டினார். இதனால் காயமடைந்த அந்த வாலிபரை போலீசார் காப்பாற்றினார்கள். பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அந்த இளம்பெண் குறிப்பிட்ட வாலிபர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இருப்பினும் காவல்துறையினர் அந்த வாலிபர் மீது சாதாரண சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துவிட்டனர்.

Categories

Tech |