Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு”…. 5-வது நாளாக இதற்கெல்லாம் தொடரும் தடை…. வெளியான அறிவிப்பு….!!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற 10 தினங்களுக்கும் மேலாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து படிப் படியாக குறைய துவங்கியது. அந்த வகையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்து மற்றும் குறைந்து வருவதால் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அத்துடன் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் மற்றும் தீயணைப்புபடையினர், மீட்புபடையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வருவாய்த் துறையினர் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 5வது நாளாக தடை நீடிக்கிறது.

Categories

Tech |