Categories
அரசியல்

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா….? ஓ.பி.எஸ்-க்கு சரமாரி கேள்வி…. முன்னாள் அமைச்சர் செம காட்டம்….!!!

முன்னாள் அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எம்.எல்.ஏ கட்சி அலுவலகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 50 வருடங்களாக தமிழகத்திற்கு சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்று தந்த எம்.ஜி.ஆர் அவர்களால் கடந்த 1972-ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டது. இவருக்கு பிறகு அம்மா ஜெயலலிதா அவர்கள் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியை 70 மாவட்ட கழக செயலாளர்கள், 70-க்கும் மேற்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அ.தி.மு.க கட்சியை சிறப்பாக வழி நடத்தி செல்வதோடு, தி.மு.க கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்கின்றனர்.

இவர்களின் விருப்பத்தின் பேரில் இ.பி.எஸ் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் 3 முறை முதலமைச்சராகவும், துணை முதல் அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஓ.பி.எஸ். இவர் கோவிலாக இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் ரவுடிகள் மற்றும் காட்டுமிராண்டிகளால் நடத்திய வன்முறை சம்பவத்தால் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஓ.பி.எஸ் தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். இதன் காரணமாக அ.தி.மு.க கட்சி அலுவலகம் உங்க தாத்தா வீட்டு சொத்தா? இல்ல உங்க அப்பா வீட்டு சொத்தா? என ஓபிஎஸ் இடம் முன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கட்சி அலுவலகம் 1 1/2 கோடி தொண்டர்களின் சொத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |