தமிழக பள்ளி மாணவ, மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு வசதியாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதியை குறிக்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் கயிறு கட்டும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது இதனை தடுக்கும் விதமாக சமூக பாதுகாப்பு துறை தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மாணவ மாணவியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்.
மாணவ மாணவியர்கள் தினந்தோறும் பள்ளி சீருடை சுத்தமாக அணிய வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து தலைவர வேண்டும் கை, கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலைமுடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும். காலில் காலணி அணிய வேண்டும். மேலும் மாணவர்கள் டக்கின் செய்யும்போது சீருடை வெளியே வராத விதமாக இருக்க வேண்டும். பெற்றோர் கையெழுத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுமுறை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கு செல்லும்போது அடையாள அட்டை அணிய வேண்டும். பிறந்தநாள் என்றாலும் கூட மாணவ, மாணவிகள் பள்ளி சீருடைகள் தான் பள்ளிக்கு வர வேண்டும். மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனம், செல்போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. வகுப்பறையில் பாடங்களை கவனமாக கவனிக்க வேண்டும்.
ஆசிரியர்களின் பேச்சை மாணவர்கள் கேட்க வேண்டும். மாணவ மாணவியர்கள் சீருடைகளில் பள்ளிக்கு வரும் போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அடிக்கடி கை கால்களை கழுவ வேண்டும். மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும். மாணவ மாணவியர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மற்றும் எந்த ஒரு டேட்டோ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்படாது. மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களின் சீருடை சட்டையில் உள்ள பொத்தான்களை கழட்டக்கூடாது. வகுப்பறையில் நோட்டுப் புத்தகங்களை கிழித்து வீசக்கூடாது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் எதுவும் அனிந்து வரக்கூடாது. மாணவ மாணவிகள் பிடி வகுப்பின் போது வளாகத்திற்கு உள்ளையே விளையாட வேண்டும் வெளியே செல்லக்கூடாது. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது.