Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்… மனைவியை கொன்று வேக வைத்த கொடூர கணவர்…. அதிர்ச்சியில் குழந்தைகள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் தன் பிள்ளைகளின் கண் முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்து கொப்பரையில் போட்டு வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் இருக்கும் குல்ஷன் இ இக்பால் என்னும் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக இருக்கும் ஆஷிக்கிற்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில், அவரின் 15 வயது மகள் கடந்த புதன்கிழமை அன்று காவல்துறையினரிடம் கடும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி, சிறுமி கூறிய இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர்.

அங்கு, சமையல் அறையில் இருக்கும் கொப்பரைக்குள் ஆசிக்கின் மனைவியின் உடல் வெந்து போன நிலையில் இருந்தது. அதன் பிறகு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தன் பிள்ளைகள் ஆறு பேரையும் வைத்துக் கொண்டே ஆசிக் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்து கொப்பரையில் போட்ட அதிர வைக்கும் தகவல் தெரியவந்தது. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

3 பிள்ளைகளோடு ஆசிக் தப்பிவிட்ட நிலையில் மீதமுள்ள 3 பிள்ளைகள், அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |