Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆத்தாளூரில் வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழா…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்…!!!!!

ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

Categories

Tech |