Categories
சினிமா தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி பட வழக்கு…. ஆஜராவதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு நீதிமன்றம் விலக்கு….!!!!!

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி . இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றதால் வழக்கு தொடரப்பட்டது. படத்தில் தனுஷ் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்துதல், தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் நடிகர் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் பொழுது உரிய எச்சரிக்கை வாசகம் இடம் பெறாததால் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சென்ற 2014 ஆம் வருடம் தமிழ்நாடு புகையிலை மற்றும் கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பாக புகார் அளிக்கப்பட்டதில் விசாரணை செய்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் பட தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கூறியும் விசாரணைக்கு தடை விதிக்க கூறியும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கூறியும் ஐஸ்வர்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |