கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கு தெரியும். அவர் 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டார். நன்றாக இருக்கிறார். வீட்டில் இருந்தால் எதாவது இடையூறுகள் இருக்கும் என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்