பிலிப்பைன்ஸ் கியூசான் மாகாணத்திலுள்ள முலானேயில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு புது வித வித்தியாசமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவையின்போது ஊழியர்கள் மக்களுக்கு புன்னகையுடன் பணி செய்ய வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும். இந்த உத்தரவை மீறும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டாட்டில் அகுயர் கூறியதாவது “மக்களுக்கு சேவை செய்யும்போது அமைதி மற்றும் நட்பு சூழ்நிலையை வெளிப்படுத்துவதன் வாயிலாக நேர்மையை வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார். முலானே பகுதியிலுள்ள அரசு ஊழியர்கள் தங்களிடம் உதவிபெற வரும் உள்ளூர் வாசிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நட்புரீதியில் சேவை வழங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரிஸ்டாட்டில் தெரிவித்துள்ளார். இப்புதுவித அறிவிப்புக்கு பொதுமக்கள் பலர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.