நடிகை கீர்த்தி சுரேஷை இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் படத்தின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றார்கள். அண்மையில் கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினியைத் தொடர்ந்து இளவரசி குந்தவையின் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் திரிஷா கம்பீரமாக இருக்கின்றார் எனக் கூறினர். மேலும் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷை தற்போது கிண்டல் செய்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் முதலில் கீர்த்தி சுரேஷை தேர்வு செய்திருந்தார். அவரும் ஒப்புக்கொண்ட நிலையில் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்தது.
ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை விட மனம் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து விலகி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார். முதலில் ரஜினியுடன் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட்டதற்காக ரஜினி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் பாராட்டினார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர், டீசர் உள்ளிட்டவற்றை பார்த்தவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்காமல் தவறு செய்து விட்டீர்கள் என விமர்சனம் செய்து வருகின்றார்கள்.