வாலிபரை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சோதியக்குடி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன்,அவரது சகோதரர் ஆசைத்தம்பி ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸ்கரன், ஆசைத்தம்பி ஆகிய 2 பேரும் சேர்ந்து சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் சத்தியமூர்த்தியை கட்டை மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சத்தியமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தவர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரன், ஆசை தம்பி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தியை கொலை செய்த பாஸ்கரன்,ஆசைத்தம்பி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் . இந்நிலையில் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.