நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கேரளா, அசாம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வை ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அபராதம் ஏதும் விதிக்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.