மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து தலைநகர் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழை அடுத்து மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்கள் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புனே மாவட்டத்தில் வரும் ஜூலை 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்தாப்பூர், பராமதி, டவுண்ட், ஷிருர் மற்றும் புரந்தர் ஆகிய தாலுகா களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலக நேரத்தில் பள்ளியில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் உள்ளாட்சி நிர்வாகத்தின் உத்தரவின் படி கனமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நிர்வாகிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்குகிடையில் புனே பிராந்திய மாநில மையம் அளித்துள்ள தகவலின் படி, ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதி வரை காலப்பகுதியில் மகாராஷ்டிராவின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.