Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND : மேட்ச்சும் போச்சு…. துட்டும் போச்சு… சோகத்தில் இந்திய அணி..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், 3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், கேஎல் ராகுல் 64 பந்துகளில் 88 ரன்களும் எடுத்தனர். மேலும் விராட் கோலி 51 ரன்களும், அகர்வால் 32 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட் இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் அதிரடியாக ஆடி 84 பந்துகளில் 109 ரன்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் நிக்கோல்ஸ் 78  ரன்களும், டாம் லேதம் 69 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்கின் போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு போட்டியின் கட்டணத்தில் இருந்து 80 சதவீதம் அபராதம் விதித்தார் அம்பயர் கிறிஸ் பிராட். ஏற்கனவே தோல்வியடைந்திருக்கும் நிலையில், தற்போது அபராதமும் விதிக்கப்பட்டுள்ளாதால் இந்திய அணி சோகத்தில் உள்ளது.

 

Categories

Tech |