Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. வெள்ளத்தால் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள்… அவதியில் மக்கள்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இரவு 8 மணிக்கு மீண்டும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டி உள்ளது. இதனால் இரவு 8.15 மணிக்கு மீண்டும் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி எப்போது வேண்டுமானால் 3 மகுதுகள் மீண்டும் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்ற படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய் துறை சார்பில் சோலையாறு அணையின் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோலயாறு அணையில் முகாமிட்டு தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் அய்யர் பாடி எஸ்டேட் அருகில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுது வெள்ளைமலைடன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரட்டுப்பாறை பகுதியில் இருந்து அணலி எஸ்டேட் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் பாய்ந்து செல்வதால் காபி தோட்டங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வருவாத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், பொதுப்பணி துறையினர், போலீசார், தீயணைப்பு துறை என உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |