உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மருமகளுடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு அந்த கடையில் வேலைக்கு சேர 21 வயது உடைய இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். இவர்களும் அந்தப் பெண்ணை வேலையில் சேர்த்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அந்த பெண் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி ஹோட்டல் உரிமையாளர் காரில் ஏறச் சொல்லியுள்ளார். முதலில் அந்தப் பெண் மறுக்க பிறகு இரவு நேரம் என்பதால் அவரும் காரில் ஏறியுள்ளார். பின்னர் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அந்த நபர் பெண்ணிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார்.
அதன் பிறகு பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததால் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது அந்த அவர் வலுக்கட்டாயமாக பாலியல் சீதலில் ஈடுபட்டதால் வேறு வழியின்றி ஓடும் காரில் இருந்து கதவை திறந்து அந்தப் பெண் கீழே குதித்தார். அவருக்கு பழக்க காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை குழுவை கொண்டு ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர். வேலைக்கு வந்த 21 வயது இளம்பெண்ணிடம் ஹோட்டல் உரிமையாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது m