Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஜாமினில் வெளிவந்த ரவுடியை வெட்டி கொலை செய்த 2 பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

ஜாமினில் வெளிவந்த ரவுடியை இரண்டு பேர் ஓடு ஓடி வெட்டி கொலை செய்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் இவர் துலுக்கம்பட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் பங்கேற்ற பொழுது இவருக்கும் இவரின் உறவினர்களான நடராஜன், ஜோதிராஜன், சிவக்குமார் உள்ளிட்டோருக்கிடையே தகராறு ஏற்பட்டு இருக்கின்றது.

பின் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவின் போது சுபாஷ் சந்திரபோஸ் மஞ்சள் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து ஜோதி ராஜன், சிவகுமார் மீது ஊற்றியதுடன் தான் கொண்டு வந்த அரிவாளை காட்டி மிரட்டி இருக்கின்றார்.

இதனால் இருதரப்பிற்கு இடையே தகராறு ஏற்பட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளை எடுத்து வெட்ட வந்த பொழுது ஜோதிராஜன் மற்றும் சிவக்குமார் பிடுங்கி வெட்ட முயற்சி செய்ததனால் பயந்து போன சுபாஷ் சந்திரபோஸ் அங்கிருந்து ஓட முயற்சியும் விரட்டிச் சென்று இருவரும் அவரை சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்தார் சுபாஷ் சந்திரபோஸ். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்ததையடுத்து போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |