Categories
மாநில செய்திகள்

5 , 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகைதிருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் திரும்ப அளிப்பதுதான் அவர்களது கடமை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்ளை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரம் வந்த பிறகே அது குறித்து ஆய்வு செய்யமுடியும்.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர்கட்சிகளின் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி. மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கும் மீண்டும் பயிற்சியளித்து திறன் மேம்பாடு செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசுப் பள்ளிகளில் இந்தி விருப்பப்பாடமாக வேண்டும் என ஒருசில ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக்கொடுத்தாலே போதும் என்றார்.

Categories

Tech |