Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என் மகனை கொலை செய்தது இவர்கள்தான்…. பெற்றோர் அளித்த மனு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகனை கொலை செய்த 3  பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழமுட்டும் பகுதியில் அல்மாண்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிக்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நிக்சனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அழைத்துள்ளனர். அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி எங்கள் மகனை 3  வந்து அழைத்து சென்றனர். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் அவரை பல இடங்களில் தேடினோம். இந்நிலையில் எங்களது மகன் நிக்சன் முட்டம்  துறைமுகத்தில் இருந்து  கிடந்தார். இந்நிலையில் எங்கள் மகனை கொலை செய்த 3  பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே  எங்கள் மகனின் சாவிற்கு காரணமான அந்த 3  பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |