தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் படிப்புச் செலவு மொத்தத்தையும் அரசு ஏற்கிறது. இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்காமல் இருப்பதற்காக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் https://t.co/eqU9OW3P9K என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதனையடுத்து அரசு உதவி பெறாத பள்ளிகளில் RTE மாணவர்களின் வருகை பதிவு குறித்தும் பார்க்கலாம். இதற்கு முதலில் ப்ளே ஸ்டோரில் சென்று TNSED என டைப் செய்து Search ஆப்ஷன் ஐ கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு TNSED ஸ்கூல் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து
USER NAME (school udice code ) மற்றும் மாற்று பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்து டுடே ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்து பொருத்தமான ஸ்கூல் வொர்க்கிங் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சேவ் ஆப்ஷனை கிளிக் செய்தால் டுடேஸ் ஸ்டேட்டஸ் Saved Successfully என்ற pop-up தோன்றும்.
இதைத் தொடர்ந்து RTE attendance என்பதை கிளிக் செய்தால் ஸ்டுடென்ட் லிஸ்ட் sybchronise செய்யப்படும். மேலும் குறிப்பிட்ட வகுப்பு மற்றும் பிரிவினை தேர்வு செய்தால் திரையில் தோன்றும் RTE மாணவர் பட்டியலில் டீஃபால்டாக present என்று காட்டப்படும். ஆனால் மாணவர் ஆப்ஷனாக இருந்தால் A என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதை கிளிக் செய்தவுடன் save & sync option -ஐ கிளிக் செய்தால் savee successfully pop up காட்டும். இதன் மூலம் RTE மாணவர்களின் வருகை பதிவிட்டினை தெரிந்து கொள்ளலாம்.