Categories
மாநில செய்திகள்

தாம்பரம் – விழுப்புரம்…. மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வரை மின்சார ரயில் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவை தற்போது வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வருகிற ஜூலை 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னை தாம்பத்திற்கு வரும் மின்சார ரயில் சேவையானது வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கி வந்தது. இந்த ரயில் சேவை இனி வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும். இந்த அறிவிப்பு ஜூலை 17-ம் தேதி முதல் அமுலுக்கு வரும்.

Categories

Tech |