தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, 2020 – 2021ல், 63 ஆயிரத்து, 388 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மின் கொள்முதல், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்கான செலவு, 76 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதனால், அந்த ஆண்டில் இழப்பு, 13 ஆயிரத்து, 407 கோடி ரூபாயாக அதிகரித்தது. பல ஆண்டுகளாக மின் வாரியம் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இதனால் மின் கட்டணத்தை மாற்றி அமைத்தால் தான் புதிதாக கடன் வழங்க முடியும் என, வங்கிகள் கைவிரித்து விட்டதால், தமிழக மின் வாரியம் நிதி நெருக்கடியில் தவிக்கிறது. அதைச் சரிக்கட்ட விரைவில் மின் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே பொதுமக்கள் விலைவாசி உயர்வு மற்றும் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக தவித்து வரும் நிலையில் தற்போது மின் கட்டணமும் உயர்ந்தால் அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.