Categories
உலக செய்திகள்

பிரதமர் அலுவலகம் முன் குவிந்த மக்கள்…. மீண்டும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…!!!

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் பிரதமர் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்து இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த 100க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரதமர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விரட்ட முயன்றனர். மீண்டும் நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |