Categories
அரசியல் மாநில செய்திகள்

மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய அமைச்சர்….. வைரலாகும் பகீர் வீடியோ….!!!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி பள்ளி வளாகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆடு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அருப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொகுதி மக்களிடம் இருந்த மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது மனு கொடுத்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் தனது கையில் வைத்திருந்த கடித உரையால் தாக்கினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |