இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சீனாவைச் சேர்ந்த 4 வயதான சிறுமி முற்றிலும் குணமடைந்துவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. ‘சீனாவில் இருந்து ஒரு குடும்பத்தினர் கடந்த வாரம் மலேசியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்தனர். இதில் 4 வயது சிறுமியை கொரோனா வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அச்சிறுமி லங்காவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இந்த சிறுமியை மட்டும் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படிருந்த நிலையில், தற்போது அந்த சிறுமிக்கு உடல்நலம் சீராக உள்ளது. முற்றிலும் குணமடைந்து விட்டதால் சிறுமி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்’, என மலேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். பூரணமாக குணமடைந்து விட்டதால் மலேசிய மருத்துவமனை அந்த சிறுமிக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரும் சான்றிதழுடன் சீனாவுக்குத் திரும்புவார்கள் என சீனத் தூதரகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.