தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பொன்னியன் செல்வனின் வந்தியத்தேவனாக நடிக்க விஜய்தான் முதலில் தேர்வு செய்தார் மணிரத்தினம்.
ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதமானதால் படத்தில் இருந்து விஜய் வெளியேறினார். அதன்பிறகு கார்த்தியை ஒப்பந்தம் செய்தார்கள். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நயன்தாராவும் விலகினார். பொன்னியின் செல்வனில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சிம்பு நடித்தால் நான் அடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக அப்போது பேசப்பட்டது. இதனையடுத்து அவர் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலையில் தனிப்பட்ட விஷயத்தை நயன்தாரா சேர்த்து பார்க்க மாட்டார். அதனால் அவர் இந்த படத்தில் இருந்து விலக இது காரணமாக இருக்காது என்று நம்பப்படுகிறது . பொன்னியன் செல்வன் படத்திலிருந்து சிம்பு வெளியேறதாக தற்போது நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததால் தான் பொன்னியன் செல்வன் படத்திலிருந்து சிம்பு வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாராவும் சிம்புவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்து விட்டனர் காதல் முறிவுக்கு பிறகு இது நம்ம ஆளு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்படி இருக்கும் போது நயன்தாராவால் பொன்னின் செல்வனை நிராகரித்திருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.