நடிகர் விஜய்யிடம் சம்மன் அளித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்ற வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் கொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.