பிரபல நடிகர் மது விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தல அஜித் ஜொலிக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்துடன் பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். அவர் ஒரு விருந்து நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித், ஷாலினி, அவருடைய மகள் அனோஷ்கா மற்றும் சிலர் கையில் மது கோப்பையை வைத்திருக்கின்றனர். இந்த படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.