நாடு முழுதும் ஏழை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த இலவசகேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது ரேஷன் அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் வருடந்தோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படயிருக்கிறது. அரசின் இம்முடிவானது பொதுமக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.
தற்போது மத்திய அரசினுடைய அந்தியோதயா கார்டு பயனாளர் ஒவ்வொருவருக்கும் இந்த இலவச சிலிண்டர்கள் கிடைக்க உள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “மாநிலம் முழுதும் உள்ள தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருடந்தோறும் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்போது அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமே இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள இயலும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி மாநில அரசு அறிவித்துள்ள இச்சலுகையை பெற்றுக்கொள்ள ஒருசில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஜூலை மாதத்திற்குள் ரேஷன் பயனாளிகள், அந்தியோதயா அட்டையை இத்திட்டத்தில் இணைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்த பிறகு ரேஷன் அட்டைகள் அந்தியோதயா நுகர்வோர் பட்டியலில் இடம்பிடிக்கும். இப்பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் பயனர்களுக்கு இலவசமாக சிலிண்டர்கள் வழங்கப்படும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தநடவடிக்கையால் 55 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.