ஜார்க்கண்டில் உள்ள ஜம்தாரா மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் அரசு நடத்தும் பல அரசு தொடக்கப்பள்ளிகளில் வாராந்திர விடுமுறை ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை ஆக மாற்ற வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் அழுத்தத்தால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வாராந்திர விடுமுறை மாற்றம் தவிர சில பள்ளிகளில் பெயர்களில் உருது என்ற வார்த்தைகளையும் சேர்க்கப்பட்டு அவை சிறுபான்மை பள்ளிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக மாநில கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜார்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹாதோ செய்தியாளர்களிடம் கூறியது, மாநிலம் முழுவதும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விசாரணை நடத்தி வரு வார்கள் தங்கள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து “அரசு பள்ளியில் விதிமுறைகளின்படி இயங்கும் உள்ளூர் அழுத்தத்தின் கீழ் அல்ல”. மேலும் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் மற்றும் கர்மண்ட் பகுதியில் உள்ள 20 க்கும் மேற்பட்ட பள்ளிகள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க கோரி கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கேட்டு கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விதிமுறைகள் கண்டறியபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜம்தாரா துணை ஆணையர் ஃபைஸ் அகமது மும்தாஜ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சரியான நிலவரத்தை கண்டறிய மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டுக் கொண்டேன் என்றும் அரசு அர்ப்பணிப்புள்ள உருது பள்ளிகளையும் நடத்துகிறது. எனவே வழக்கமான பணிகளில் ஏதேனும் விதிமீறல் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும். இந்த நடைமுறை எப்போதிலிருந்து அமலில் உள்ளது என்பதை கண்டறியவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்தாரா மாவட்டத்தில் 8 அர்ப்பணிப்புள்ள உருது தொடக்கப் பள்ளிகள் உள்ளது.