மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டம் படிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை.
மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படுவதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மாநில அரசின் கொள்கைகளை திட்டங்களை நிறைவேற்றுவது ஆளுநரின் கடமை. ஆளுநரின் செயல்பாடுகள் பாஜகவின் பிரச்சாரமாக உள்ளது. இந்திய நாட்டின் வரலாற்றை முதலில் கவர்னர் படிக்க வேண்டும். கவர்னர் எந்த ‘-ism’ பின்பற்றுவேராக இருந்தாலும் ‘Humanism’ என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.