தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து உணவுப் பொருட்கள் மடிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிகவும் அவசியம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் கார்டு அவசியம். மேலும் இருப்பிட சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் மிகவும் முக்கியம். முகவரி சான்றாக சிலிண்டர்வில் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் சிலிண்டர் எடுத்து இருக்க வேண்டும்.
அதனைப் போலவே குடும்ப நபர்களின் ஆதார் கார்டு ரேஷன் அட்டை விண்ணப்பிக்க தேவைப்படும். குடும்பமாக உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. தனி நபர்களுக்கு ரேஷன் கார்டு கிடையாது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட தனிநபருக்கு ரேஷன் கார்டு அரசு வழங்கி வருகிறது. குடும்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் அட்டை வழங்கப்படும்.
அதாவது குடும்பம் என்பது குறைந்தது கணவன் மற்றும் மனைவியாகிய இருவரும் அடங்கியிருக்க வேண்டும். திருமணமானவர்கள் தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் குழந்தை பிறந்த பிறகு அவர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் புதிதாக திருமணமான ஆணும் பெண்ணும் தங்களது பெற்றோரின் ரேஷன் கார்டில் உள்ள பெயரை நீக்க வேண்டும். அதற்கு திருமண அழைப்பிதழ் தேவைப்படும் அல்லது திருமணச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
இருவரின் பெயரும் நீக்கப்பட்ட பிறகு புதிய ரேஷன் கார்டுக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பு சிலிண்டர் இணைப்பு வாங்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து இ சேவை மையங்களிலும் ரேஷன் கார்டுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம். அதனைப் போலவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க முடியும். அதனைத் தவிர யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமாக தாங்களே விண்ணப்பிக்கும் வசதியும் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவ்வாறு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும். அதனைப் போல விண்ணப்பித்த இரண்டு மாதங்களில் ரேஷன் கார்டு வந்து சேரும். தாலுகா அலுவலகத்திற்கு ரேஷன் கார்டு அனுப்பி வைக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் அங்கே சென்று உங்களது ரேஷன் கார்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு ஒப்புதல் மற்றும் ரேஷன் கார்டு டெலிவரி செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் எஸ் எம் எஸ் மூலமாக வாடிக்கையாளரின் நம்பருக்கு வந்து சேரும். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க அரசு இ சேவை மையங்களில் 60 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதனைப் போலவே தனியார் பொது சேவை மையங்களிலும் 300 ரூபாய் முதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது ஒவ்வொரு பகுதியை பொருத்தும் மாறுபடும்.