Categories
சினிமா

இந்த ஆண்டில் சிறந்த படம் இதுதான்…. நடிகர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்….!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் வரிசையில் கௌதம் ராமச்சந்திரனும் ஒருவர். இவர் தற்போது “கார்கி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி மற்றும் பிளாக் ஜெனிசன் இணைந்து கார்கி படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். அதனைதொடர்ந்து சூர்யா ஜோதிகாவின் 2d எண்டர்டெயின்மெண்ட் வழங்க உள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடா என மூன்று மொழியில் இப்பட தயாராகி வருகிறது.

இந்த  திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான கார்கி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், ” இந்த ஆண்டின் சிறந்த படமாக கார்கி இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் சென்று பாருங்கள். எல்லோரும் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். மேலும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று அதில் தெரிவித்து இருந்தார்.

Categories

Tech |