Categories
மாநில செய்திகள்

ரூ. 200, ரூ. 300, ரூ. 2000, ரூ. 3000, ரூ.6000…… செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…..!!!!

செஸ் ஒலிம்பியாட்டுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

44-வது ஸ்டேஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் அணியினர்கள் தங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து tickets.aicf.in என்று அரசு வலைத்தளம் பக்கத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், 19 வயது உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 200 மற்றும் 300 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு ரூபாய் 2000 மற்றும் 3000 ரூபாயும்,  வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் 6000 மற்றும் ரூபாய் 8000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |