Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்….. “ஒன்றாம் வகுப்பில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பள்ளிகளில் நிகழும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 13ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் அன்றைய தினமே தொடங்கியுள்ளது. சேர்க்கை தொடங்கிய முதல் இரு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. தற்போது தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார சிக்கல், விலையில்லா பொருள்கள் ஆகியவற்றால் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை என அரசு பள்ளிகளில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. சென்னை, நாமக்கல், கோவை, தர்மபுரி, வேலூர் உள்ள பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தற்போது வரை மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 9. 40 லட்சம் மாணவ மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளன. அதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 7.5 லட்சம் மாணவர்களும், ஒன்றாம் வகுப்பில் மட்டும் 5 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |