Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருப்பட்டி மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலமை தாங்கினார். அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர் நலம் நாடு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கருப்படி விற்பனை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கருப்பட்டி தேய்க்கமடைந்து உள்ளது.

இதன் காரணமாக கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கருப்பட்டி பெரிய வடிவில் தயாரிக்கப்படுகிறது. இதனை பிஸ்கட், தொட்டி அச்சு, குழிப்பணியாரம், புட்டு அச்சு போன்ற வடிவில் தயார் செய்து விற்பனை செய்வதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் அதனை மர ஏறும் தொழிலாளர்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்று உருவமாற்றம் செய்வதற்கு இடையூறு செய்கின்றனர். எனவே கருப்பட்டி மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அனுமதி வழங்கி கருப்பட்டி உற்பத்தி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |